அமெரிக்காவின் மினாபொலிசில், கடந்த மே 25-ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட், (46) என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை ஒரு காவலர் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரிக்கிறார். தொடர்ந்து அவரை தரையில் தள்ளி அவரது கழுத்தை தன் கால் முட்டியாமல் தாக்கியுள்ளார். இதில், மூச்சுவிட முடியாமல்,பிளாய்டு, அதே இடத்தில் உயிரிழந்தார். இது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது.
கடந்த மே 25-ஆம் தேதி மினாபொலிஸ் நகரில் கடைக்கு வந்த ஜார்ஜ் பிளாய்ட், 20 டாலர் கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். அந்த டாலர் போலியானது என்பதை கண்டுபிடித்த கடைக்காரர் காவல்துறையை வரவழைத்துள்ளார். காரில் வந்த நான்கு காவலர்களில் ஒருவர் (சவ்வின்) ஜார்ஜ் பிளாய்ட் கைகளை பின்னால் கட்டி குப்புற படுக்க வைத்து கழுத்தை தனது முட்டிக் காலால் நெருக்கியுள்ளார். கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் 46 வினாடிகள் முட்டிக்காலால் பிளாய்ட் கழுத்து நெருக்கினார். இதனால் பிளாய்ட் மூச்சுவிட முடியாமல்தவித்தார். ஒரு கட்டத்தில் பிளாய்ட் சுயநினைவை இழந்த பின்பும் அந்தக் காவலர் தனது காலை எடுக்கவில்லை. சவ்வின் தவிர மற்ற மூன்று முன்னாள் அதிகாரிகள், தாமஸ் லேன், ஜே.அலெக்சாண்டர் குயெங், டூ தாவோ ஆகியோர் பிளாய்ட் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
காவல்துறையின் மிருகத்தனத்தையும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ந்த வேதனையையும் நிரூபிக்கும் விதமாக இந்த வீடியோவை பிரேஷியர் எடுத்துள்ளார். அதன் விளைவாக துன்புறுத்தல்களுக்கு தற்போது அவர் ஆளாகியுள்ளார். பிரேஷியரின் முகநூலில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதையும் அவர்எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக, “நீங்கள் ஏன்காவல்துறையினருடன் சண்டையிடவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்குபதிலளித்த பிரேஷியர் காவல்துறையை எதிர்த்துப் போராடவோ, பிளாய்ட்டுக்கு உதவவோ 17 வயது நிரம்பிய எனக்கு பயமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட இடத்திற்கு மறுநாள் பிரேஷியர் சென்றுள்ளார்.
அங்கிருந்தவர்களிடம் அவர் இறப்பதை நான்பார்த்தேன் எனக் கூறும் வீடியோவும் வெளியாகி யுள்ளது. காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடத்திய மக்கள் அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டுள்ளனர்.“எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். எப்படிஉணர்கிறீர்கள் என்று? எப்படி உணர வேண்டும்என்று எனக்குத் தெரியவில்லை, காரணம் அந்தசம்பவம் எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. அந்த மனிதர் சம்பவத்தன்று இரவு எட்டு மணியளவில் இங்கே இருந்தார். நான் எனது உறவினரை கடைக்கு அழைத்துச் சென்று கொண்டிரு ந்தேன். அவர் தரையில் கிடப்பதைப் பார்த்தேன்” என்றும் விளக்கியுள்ளார். இந்த நிலையில் மிருகத்தனமாக நடந்துகொண்ட காவலரின் நடவடிக்கைக்கு பிரேஷியா ஒரு சாட்சியாக உள்ளார். அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.