வாஷிங்டன்:
இந்தியா, சீனா போன்ற நாடுகளில்அதிக சோதனைகளை மேற்கொண்டால், உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான அமெரிக்காவை விட அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத் தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள டிரம்ப், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, ஜெர்மனி நான்குமில்லியன், தென் கொரியாவில் மூன்று மில்லியன் சோதனைகளே நடத்தப்பட்டுள்ளன என்றார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ்வள மையத் தகவலின் அடிப்படையில், அமெரிக்கா கிட்டத்தட்ட 1.9 மில்லியன் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,09,000- அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்,அதே நேரத்தில்இந்தியா மற்றும் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2,36,184, 84,177 ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை நான்கு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் டிரம்ப்போ, “அமெரிக்காவில் 20 மில்லியனுக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டுள்ளோம். இதை நினைவில் கொள்ளுங்கள். சீனாவிலோ, இந்தியாவிலோ அதிகமாக பரிசோதனை செய்தால்,அங்கும் பாதிக்கப்பட்டோர் அதிகமாகஇருப்பர்”. அமெரிக்கா கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறது. அமெரிக்கா பொருளாதார சரிவிலிருந்து மீள்வது சாத்தியமில்லாதது என்றனர். ஆனால், அமெரிக்கா மீண்டு வருகிறது என்றார்.கடந்த மூன்று ஆண்டுகளில் தான் ஒருவலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ளதாகக் கூறியுள்ள டிரம்ப். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதாக உறுதியளித்துள்ளார்.