வாஷிங்டன்
கொரோனா வைரஸ் சீன நாட்டின் வூகான் மீன் சந்தையில் உருவானது அல்ல என்று அமெரிக்க பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் டுலான் பல்கலைக்கழகத்தின் மருத்துவயியல் கல்லூரி பேராசிரியர் ராபர்ட் கார்ரி எ.பி.சி. எனும் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது," கொரோனா வைரஸ், வூகானிலுள்ள மீன் சந்தை ஒன்றில் உருவானது என்று பலர் கருதினர். ஆனால் இது தவறான கருத்து. எமது ஆய்வு மற்றும் பிற ஆய்வுகளின் முடிவு, அங்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் முன்பே அந்த வைரஸ் உருவானதைச் சுட்டிக்காட்டுகிறது. அங்கு வைரஸ் இருந்தது நிச்சயமானது. ஆனால், வைரஸ் உருவான இடம் அது அல்ல என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, பேராசிரியர் கார்ரியின் குழு வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில், புதிய கொரோனா வைரஸ் இயற்கையான வைரஸ் அமைப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.