tamilnadu

img

கரும்பு விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது

 வேலூர், அக்.15- வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 4 ஆண்டுக ளாக கரும்பு நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி  வந்தனர். வரும் 20 ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை  வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது. தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் சி.பெருமாள் மாவட்டத் தலை வர் எல்.சி.மணி, நிலவு குப்புசாமி, பழனி ஜி.ரமேஷ் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.  விவசாயிகள் போராட்டம் நடத்திய பந்தலுக்கு வந்த சர்க்கரை ஆலை அதிகாரிகள் மாநில கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரிகளிடம் பேசினோம் விரைவில் நிலுவைத் தொகை வழங்குவது குறித்து அறிவிப்பு அரசு வெளியிடும்,” எனக் கூறினர் பின்னர் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடி வில் 2018-19 ஆம் ஆண்டின் நிலுவைத் தொகை ரூ.5.56 கோடியை வரும் 22-ஆம் தேதிக்குள் தருவதாக ஆலை நிர்வா கம் ஒப்புக்கொண்டது. இது குறித்து எழுத்துப் பூர்வமாக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் உறுதி மொழி ஏற்று விவசாயிகளின் காத்தி ருப்பு போராட்டம் தற்காலிகமாக விளக்கி கொள்ளப்பட்ட தாக விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஸ்ரீதரன், பெரு மாள், ஆகியோர் தெரிவித்தனர்.