tamilnadu

img

கீழடி ஆராய்ச்சி உலகளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்யும் வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் பெருமிதம்

வேலூர், அக். 19- கீழடி ஆராய்ச்சி மூலம் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரி வித்தார். விஐடி பல்கலைக்கழ கத்தின் கட்டடக்கலை பள்ளி சார்பில் ‘வேலூா் மரபும் வாழ்வும்’ என்னும் தலைப்பில் 3 நாட்கள் நடை பெறவுள்ள கருத்தரங்கம் சனிக்கிழமை (அக். 19) தொடங்கியது. கருத்தரங்கை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் பேசுகை யில், இந்தியா தனித்துவ மான அனைத்து மதத்தினரும் வாழும் நாடு. வேற்றுமை யில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா. வளமான மரபுக ளும், அதிகமான நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் உள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் சிறந்து விளங்கியது நம் நாடு. தற்போது கீழடி ஆராய்ச்சியில் தினமும் புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. கீழடி ஆராய்ச்சி மூலம் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் என்றார். பாரம்பரியம், மரபு ஆராய்ச்சியாளா் பூனம் வொ்மா மஸ்கார்யென் ஹாஸ் கௌரவ விருந்தின ராகப் பங்கேற்றுப் பேசினார். இதில் கட்டடக்கலை பள்ளி இயக்குநா் தேவி பிரசாத், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.