ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 66 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஸ்ரீராம் (66). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதைதொடர்ந்து விசாரணை நடத்திய ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் ஸ்ரீராமை கைது செய்ததோடு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.