tamilnadu

img

சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து தீர்மானம் நிறைவேற்றுக: ஸ்டாலின்

சென்னை, பிப். 19- பாதுகாக்கப்படட சிறப்பு வேளாண் மண்டலம் குறித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று  திமுக தலை வர் ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் புதனன்று(பிப்.19) கேள்வி நேரத்  திற்கு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “காவிரி டெல்டா  மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டல மாக அறிவிக்கப்படும் என்று முத லமைச்சர் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தார். அந்த நேரத்தில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்  டங்களுக்கு அனுமதி கொடுக்க  மாட்டோம் என்று கூறியி ருந்தார்.  ஆனால், ஏற்கனவே  அறிவிக்கப்பட்ட அந்த திட்டம்  பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை” என்றார்.

இம் மாதம் 10 ஆம் தேதி  மத்திய அரசுக்கு முதலமைச்சர்  எழுதிய கடிதத்திலும் அதுப்பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்  கான அனுமதியை ரத்து  செய்தால் தான் பாதுகாக்கப் பட்ட சிறப்பு வேளாண் மண்ட லம் என்ற அறிவிப்பு சிறப்பாக இருக்கும் என்றும் இதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் இரு அவை களிலும் கேள்வி எழுப்பியுள்ள னர். ஆனால், அதற்கு சம்பந்தப் பட்ட மத்திய அமைச்சர் பதில் எதுவும் சொல்ல வில்லை என்றும் அவர் கூறினார். ஏற்கனவே அனுமதிக்கப் பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து இனி மேல்  புதிய திட்டங்கள் வராத வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக ஒரு சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் தீர்மானமாக ஏன் கொண்டு வர வில்லை. அதை கொண்டு வரும்  போது திமுக அதற்கு முழு ஆத ரவு தர தயாராக உள்ளது. மக்க ளவையில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தி பேசுவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

விரைவில் நல்ல செய்தி வரும்: முதல்வர்

காவிரி டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,“டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது சம்பந்தமாக சட்ட நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள் ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியிடப்படும்” என்றார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட வுடனேயே அதற்கான பணிகள் துவங்கப்பட்டு விட்டது. அதில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் விரிவாக சட்ட வல்லுனர்க ளுடன் விவாதிக்கப் பட்டு வருகிறது. என்னென்ன அதிகாரம் கிடைக்க வேண்டுமோ அதை செய்து முடித்து தாங்கள் நினைக்கின்றபடி அனைத்தும் செயல் படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.