வேலூர், ஏப்.26-வேலூர் மாவட்டம், குடியாத்தம் மொரசபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா(38). இவர் வேலூரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் சார்பில் வேலூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் பிளாட் போட்டப்பட்டது. அப்போது நெல்வாய்க்கு டிரைவர் சிவா அடிக்கடி சென்று வந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அன்று அதேபகுதியை சேர்ந்த அனுப்பிரியா(14) என்ற சிறுமி விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த சிவா, சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாராம். அவரிடமிருந்து சிறுமி தப்பியோடினார். அப்போது சிறுமியின் தலையை பிடித்து பாறாங்கல் மீது மோதி, பிளேடால் கழுத்தை அறுத்து, சிறுமியை நிர்வாணப்படுத்தி அருகே உள்ள கிணற்றில் வீசி கொலை செய்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்நிலையில் வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்து கொலை வழக்கில் சிக்கிய சிவாவுக்கு ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்ததற்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார். தண் டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.