வேலூர், மார்ச் 15- விஐடியில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்டார்ஸ் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படை யில் இந்த ஆண்டும் ஸ்டார் தினவிழா விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற் றது. விழாவில் விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டார்ஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திட்டத் தால் 659 மாணவர்கள் பயன டைந்துள்ளனர். கல்லாமை மற்றும் இல்லாமை கிரா மத்தில்தான் அதிகமாக உள்ளது, இது மாற வேண்டும். சமீபத்திய கணக் கெடுப்பின்படி தமிழகத்தில் 80 விழுக்காட்டினர் கல்விய றிவு பெற்றுள்ளனர். இதில் கிராமத்தை விட நகரவாசி கள் தான் அதிகம். இந்த நிலைமை முற்றிலும் மாற வேண்டும்’ என்றார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் தரம் உயர வேண்டும். அந்தந்த தொகுதி யின் சட்டமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி நிதியை கல்விக்கு அதிகம் செலவிட வேண்டும் என்றும் அவர் கூறினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அரசின் கூடு தல் தலைமைச் செயலாள ரும், அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனரு மான வெ.இறையன்பு பேசிய தாவது:- விஐடி, கிராமத்து மாணவர்களுக்கு கல்வி அறிவை கொடுத்து அவர்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது. கல்வி என்பது ஆற்றல் மற்றும் ஒரு உயர்ந்த நிலையை அளிப்பதாகும். நினைவாற்றல் மட்டுமே அறிவு கிடையாது என்பது நமக்குத் தெரியவேண்டும், கிராமத்து மாணவர்கள் சொந்த அறிவால் உயர்ந்து நிற்கின்றனர். கல்வியினால் வாழ்க்கையை மட்டும் உயர்த்துவதல்ல ஒரு சமூகத்தையே உயர்த்தி விடும். சிக்கனமான வாழ்க்கை செம்மையாக இருக்கும், அதே போல் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல செல்ல எளிமையாக நாம் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.