உத்தரகண்ட் மாநிலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ மதுபோதையில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான குன்வர் பிரணவ் சிங் சமீபத்தில் பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் நண்பர்களுடன் மது விருந்து ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது வாய் மற்றும் கைகளில் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஆளும் உத்தரகண்ட் அரசை மிக மோசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதுகுறிதது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்