tamilnadu

img

வாஜ்பாய் அஸ்தி கரைப்பு செலவை ஏற்க உ.பி. அரசு மறுப்பு

லக்னோ:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 2018 ஆகஸ்ட் 16-ஆம் தேதி மறைந்த நிலையில், அவரது அஸ்தி, நாடெங்கும் உள்ள ஆறுகளில் கரைக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கோமதி ஆற்றிலும் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது. 

முன்னதாக அஸ்தி கரைப்பை யொட்டி, லக்னோவில் ரூ. 2 கோடியே 54 லட்சத்து 29 ஆயி ரத்து 250 ரூபாய் செலவில் பிரம்மாண்ட மேடை, பந்தல், ஒலி-ஒளி அமைப்புடன், விழா ஒன்றும் நடத்தப்பட்டது. இதற்கான செலவு களை லக்னோ முன்னேற்றக் கழகம் என்ற அமைப்புதான் செய்திருந்தது. செலவுத் தொகையை உத்தரப்பிரதேச அரசு பின்னர் திருப்பி அளிக்கும் என்ற உறுதி மொழியின் பேரில் இவ்வாறு செய்திருந்தது.ஆனால், அஸ்தி கரைப்பு முடிந்தவுடன் அனைத்தையும் ஆதித்யநாத் அரசு மறந்து விட்டது.ரூ. 2.54 கோடியை கேட்டு, லக்னோமுன்னேற்றக் கழகம் எவ்வளவோ மன்றாடியும் பணம் கிடைக்க வில்லை.

இதனிடையே, லக்னோ முன்னேற்றக் கழகத்திற்கு, கடந்த மே 15-ஆம் தேதி பதில் கடிதம் ஒன்றை அனுப்பிய உத்தரப்பிர தேச தகவல் துறை, “இது போன்ற விழாக்களுக்குச் செலவிடுவதற்கு என நிதிநிலை அறிக்கை யில் தொகை ஒதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதால், இத்தொகையை வழங்க முடியாது” என்று ஒரே அடியாக கூறிவிட்டது. இதனால், வாஜ்பாய் அஸ்தி கரைப்புக்கு உதவிய, லக்னோ முன்னேற்றக் கழகம் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளது.