லக்னோ:
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வால், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் நகரத்தைச் சேர்ந்த இளம்பெண், ஞாயிறன்று கொலை முயற்சிக்கும் உள்ளானார். அவர் சென்ற கார் மீது, லாரியை வைத்து மோதி, கொலைமுயற்சி நடந் தது. எனினும், படுகாயங்களுடன் அவர்தப்பினார். அதேநேரம் இளம்பெண் ணின் தாயாரும், உறவினரும் இறந்துபோனார்கள். இச்சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விபத்துக்கு முன்பேஉன்னாவ் இளம்பெண்ணும், அவரது தாயாரும் “எங்களுக்கு ‘அச்சுறுத்தல்’ இருக்கிறது” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் (உள்துறை), டிஜிபி, காவல் ஆய்வாளர், சிபிஐ தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (உன்னாவ்) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பது தெரியவந்துள்ளது.ஜூலை 12-ஆம் தேதி எழுதப்பட் டுள்ள அந்த கடிதத்தில், “ பாலியல்வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு இருக்கும் சஷி சிங்கின் மகன் நவீன்சிங், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் சகோதரர் மனோஜ் சிங் செங்கார், குன்னு மிஸ்ரா மற்றும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் 2019 ஜூலை7-ஆம் தேதி, வீட்டிற்கு வந்து எங்களைமிரட்டிவிட்டு சென்றனர். எங்களுக்குசாதகமாக- எங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நீதிபதியை விலைக்கு வாங்குவதன் மூலம் குல்தீப்சிங் மற்றும் சஷி சிங் ஆகியோரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து, போலி வழக்கு மூலம் உங்களை சிறையில் தள்ளுவோம் என மிரட்டினார்கள்” என்று கூறப்பட்டு உள்ளது.