tamilnadu

img

பல மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்கிய பாஜக அமைச்சர்!

லக்னோ:
பாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், சாமியாருமான சின்மயானந்தா, மாணவிகள் பலரின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக சட்டக் கல்லூரிமாணவி ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். லக்னோவில் இருந்து 200 கி.மீ.தூரத்தில் இருக்கிறது சுவாமி சுக்தேவானந்தா கல்லூரி. அதாவது, சின்மயானந்தாவிற்கு சொந்தமான கல்லூரி. பாஜக தலைவர்களில் ஒருவரான இவர்மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இந்நிலையில், இங்கு படிக்கும்மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ மூலமாக பகிரங்கபுகார் ஒன்றை வெளியிட்டார். “சனந்த் சமாஜ் அமைப்பை சேர்ந்தபெரிய தலைவர் (சின்மயானந்தா) ஒருவர் பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார். அவர் தற்போதுஎன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். யோகி ஜி, மோடி ஜி பிளீஸ்உதவி செய்யுங்கள், எங்களை காப்பாற்றுங்கள். நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று தெரியும். ஆனால்நான் இனியும் உயிரோடு இருப்பேனாஎன்று தெரியாது. அந்த சந்நியாசியிடம் போலீசும், நீதிபதிகளும் கட்டுப்பட்டு இருப்பதாக கூறுகிறார். அவரின் பாக்கெட்டில் எல்லோரும் இருப்பதாக சந்நியாசி என்னிடம் கூறுகிறார். ஆனால் அவருக்கு எதிராக எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது” என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி காணாமல் போய்உள்ளார். நான்கு நாட்கள் ஆகியும் அந்த பெண் எங்கே போனார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக அந்த பெண்ணின்தந்தை, தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாதான் தன்னுடைய மகளை கடத்தி உள்ளார். அவர் என்னுடைய மகளை கொலை செய்திருக்கக் கூட வாய்ப்புள்ளது. போலீசார் இதை உட
னடியாக விசாரிக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, சின்மயானந்தா மீது, கடத்தல் மற்றும் குற்றச்செயல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.