tamilnadu

img

இஸ்லாமியர்களை மிரட்டிய மேனகா காந்தி

சுல்தான்பூர், ஏப்.13-இஸ்லாமிய மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால், பின்னால் அவர்கள் என்னைக் குறை சொல்லக் கூடாது என்று, சுல்தான்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான மேனகா காந்தி மிரட்டல் விடுத்துள்ளார். மேனகா காந்தி இதுவரை வெற்றிபெற்று வந்த பிலிபட் தொகுதியை, மகன் வருண் காந்திக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, மகனின் தொகுதியான சுல்தான்பூரில் போட்டியிடுகிறார்.அந்த வகையில், சுல்தான்பூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவரும் மேனகா காந்தி, பொதுக்கூட்டம்ஒன்றில் பேசும்போது, இஸ்லாமியர் களை பகிரங்கமாக மிரட்டியுள்ளார். “சுல்தான்பூர் தொகுதியில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்; இன்னும்சொன்னால் நான் ஏற்கெனவே வெற்றிபெற்றுவிட்டேன். இருந்தாலும், எனது வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்குஇருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்; அவ்வாறு இல்லாவிட்டால் அதுசரிவராது; எனவே, அனைத்து இஸ்லாமியர்களும் எனக்கு வாக்களிக்க வேண்டும்; ஒருவேளை எனக்கு வாக்களிக்காமல் போனால், அப்புறம் இஸ்லாமியர்கள் என்னிடம் உதவி என்று கேட்டுவர முடியாது; முஸ்லிம் ஒருவர் என்னிடம் காரியம் ஆகவேண்டும் என்று வந்தால், நான் எப்படி அவருக்கு உதவமுடியும்? நான் அதற்கு பொறுப்பாக மாட்டேன். எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதற்கு நான் ஒன்றும் மகாத்மா காந்தியின் வாரிசு கிடையாது. வாழ்க்கையில் எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கல்தான் ” என்று மேனகா காந்தி கூறியுள்ளார். மேனகா காந்தியின் இந்த மிரட்டல்கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.