லக்னோ:
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவருமான கம்லேஷ் பால்மிகி மர்மமான முறையில் மரண மடைந்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம் குர்ஜாவிலுள்ள அவரது வீட்டிலிருந்து உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.
வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததையடுத்து அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாகவும், அப்போது அவர் மர்மமான முறையில் உள்ளே இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விஷம் அருந்தியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் அவரது, உட
லானது பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.