tamilnadu

img

தலித் இளைஞரை மணப்பதா? மகளுக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்

லக்னோ:
தலித் இளைஞரை காதல் மணம் செய்துகொண்டதற்காக, பெற்ற மகளையே ஆணவக் கொலை செய்யப் போவதாக, பாஜக எம்எல்ஏ மிரட்டல்விடுத்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதிபாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் ராகேஷ் மிஸ்ரா. இவரது மகள் சாக்ஷிமிஸ்ரா (23).  அஜிதேஷ்குமார் (29) எனும் தலித் இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். அவரையே கடந்த வாரம் முறைப்படி பதிவுத் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

ஆனால், தனது மகள் ஒரு தலித் இளைஞனைத் திருமணம் செய்து கொண்டார் என்பதை ஏற்க முடியாத பாஜக எம்எல்ஏ ராகேஷ் மிஸ்ரா, தம்பதி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மிகுந்த அச்சத்திற்கு உள்ளான சாக்ஷி மிஸ்ரா, தனது தந்தையின் கொலை மிரட்டல் குறித்து, சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவுஒன்றை வெளியிட்டு, பகிரங்கப்படுத்தியுள்ளார். அதில், தனது தந்தை மற்றும்சகோதரர்களான ‘பப்பு பர்தால்’ மற்றும்‘விக்கி பர்தால்’ ஆகியோரால் தனக்குஆபத்து நேரலாம் என்று சாக்ஷி மிஸ்ராகுறிப்பிட்டுள்ளார். 

“மரியாதைக்குரிய எம்.எல்.ஏ.ஜி, பப்பு பர்தால்ஜி மற்றும் விக்கி பர்தால்ஜி தயவு செய்து என்னை அமைதியாக வாழ விடுங்கள். எனக்கு திருமணம் ஆகிவிட்டது. ஃபேஷனுக்கான குங்குமம் வைக்கவில்லை” என்று சாக்ஷி கூறியுள்ளார்.மேலும், “எதிர்காலத்தில் எனக்கோஅல்லது அபி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கோ ஏதேனும் நேர்ந்தால் எனது தந்தை மற்றும் சகோதரர்களே காரணம்” என்று குறிப்பிட்டுள்ள சாக்ஷி, “அப்பா, ராஜீவ், ராணாவைப் போன்ற குண்டர்களை எங்களுக்குப் பின்னால் அனுப்பியிருக்கிறீர் கள். நான் சோர்வாக இருக்கிறேன். ஒளிந்து கொள்ள முடியவில்லை. எங் கள் உயிருக்கு ஆபத்து. அபியையும் (கணவர்) அவரது உறவினர்களையும் தொல்லை செய்வதை நிறுத்திவிடுங்கள். நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்க விரும்புகிறேன்” என்றும் கெஞ்சியுள்ளார்.