ஊத்துக்குளி.ஆர்.எஸ்.-ஏப்.11-தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம்வழங்கப்பட்ட 1.6.1988க்கு முன்ஆரம்ப நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை உதவி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே ஊதியவிகிதம்தான் அளிக்கப்பட்டுவந்தது. 1.6.1988ல் இந்த மூன்று பிரிவினருக்கும் வெவ்வேறு ஊதியவிகிதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பின்னர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டார்கள். இவர்களில் பலர் 1.6.1988க்குமுன் இடைநிலை ஆசிரியர்களாக, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள். நடுநிலைப்பள்ளியில் 1.6.1988ல் பட்டதாரி தலைமைஆசிரியர்களாகப் பணியாற்றியவர்களுக்கு 1.6.1988க்குமுன் உள்ள ஒத்த ஊதிய விகிதப் பணிக்காலத்தைக் கணக்கில் கொண்டு தேர்வு நிலை/சிறப்புநிலை வழங்க ஆசிரியர்கூட்டணி அரசைக் கேட்டுக் கொண்டது. இதை ஏற்று அரசுஆணை எண் 210 பள்ளிக்கல்வி (ஜி) துறை நாள்:14.08.2009 பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அரசு அதை நடைமுறைப்படுத்த வில்லை.
எனவே 65 ஆசிரியர்கள் இந்தஆணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து வெற்றிபெற்றார்கள். ஆனால் வழக்குத்தொடராத பலருக்கு அரசு தேர்வு சிறப்புநிலை வழங்க வில்லை. எனவே தமிழக அரசை எதிர்த்து செ.நடேசன் உயர் நீதிமன்றத்தில்தொடுத்த வழக்கில் சாதகமான தீர்ப்பு 18.6.2015 அன்று வழங்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்தத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அரசின்மேல்முறையீட்டை எதிர்த்துசெ. நடேசன் உள்ளிட்ட 115ஆசிரியர்கள் வழக்குதொடுத்தனர். இந்த வழக்குகளை உயர் நீதிமன்றம் ஒருங்கிணைத்தது. 03.01.2019 நாளன்று நீதிபதி எஸ்.மணிக்குமார், நீதிபதி.சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர்கொண்ட அமர்வு தமிழக அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.40 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பின்பத்தி எண் 15 (8)ல் “இந்தத்தீர்ப்பு கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள் 1.6.1988ல் நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமைஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு 1.6.1988ல் தேர்வுநிலை/ சிறப்பு நிலை ஊதியத்தை நிர்ணயம் செய்திடவேண்டும்: அவர்களுக்கான பணிக்கால நிலுவை மற்றும் ஓய்வூதிய நிலுவைகளை எட்டுவார காலத்துக்குள் வழங்க வேண்டும்” என்று ஆணையிடப்பட்டுள்ளது.வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் பலர் ஓய்வுபெற்று பலஆண்டுகளான நிலையில் தமிழக அரசு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் பணிக்காலம் மற்றும் ஓய்வூதிய காலநிலுவைகளை வழங்கிடஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ. நடேசன் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.