உத்திர பிரதேசம் மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து விகிதத்தை அதிகப்படுத்தவே மதிய உணவு திட்டத்தை இந்திய முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுகிறது.ஆனால் பல மாநிலங்களில் முறையாக பயன்படுத்தாத வண்ணம் காணப்படுகிறது,குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்தே செல்வதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலமான உத்திரபிரதேசத்தில், மிர்சாபூர் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு உப்பு கொடுக்கும் நிலைமை அரங்கேறியுள்ளது.இதனால் மாணவர்களின் ஊட்டச்சத்து கேள்விகுறியாக காணப்படுகிறது.