tamilnadu

வில்லியம் கிரெகம் மெக் ஐவரின் 144 வது நினைவு தினம்

உதகை, ஜூன் 8- உதகை அரசு தாவரவியல் பூங்கா உரு வாக காரணமாக இருந்த வில்லியம் கிரெகம் மெக் ஐவரின் 144 வது நினைவு தினத்தை யொட்டி, அவரது கல்லறைக்கு திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் பேசியதாவது, நீலகிரி மாவட்டத்தி லுள்ள சிறப்பு வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா அமைய காரணமாக இருந்த வில்லி யம் கிரெகம் மெக் ஐவரின் 144-வது நினைவு தினம் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக அனுசரிக் கப்பட்டது. 1848 ஆம் ஆண்டு மெக் ஐவரால் பூங்கா அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகை மரங்கள் நடப்பட்டு 1867 ஆம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது.  அரசு தாவிரவியல் பூங்கா உலக பிர சித்து பெற்றது.

22 ஹெக்டர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது. தோட்டக் கலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்காவிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளுர் வாசிகள் வரை வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் பொன்சாய் மரங்கள், மூலிகைச்செடிகள், அழகான புதர் கள் உள்ளிட்ட 20 மில்லியன் ஆண்டுகள் பழ மையான மரம் ஒன்றும் உள்ளது என தெரி வித்தார்.  இந்நிகழ்வில் தோட்டக்கலைத்துறை (இணை இயக்குநர்) சிவசுப்ரமணிய சாம் ராஜ், தோட்டக்கலைத்துறை உதவி இயக்கு நர் ராதாகிருஷ்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.