tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்

தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுவதாக கூறி ஆலையைச்சுற்றி இருக்கும் பொதுமக்கள் கடந்த ஆண்டு 100 நாட்களாக அமைதியான வழியில் போராடினர். இதையடுத்து போராட்டத்தில் 100 வது நாளான மே 22ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியான வழியில் பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் இன்று துப்பாக்கி சூட்டில் முதலாம்ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்ட மனித உரிமை ஆணையம் துப்பாக்கி சூடு வழக்கை முடித்து வைத்துள்ளது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடும் விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைப்பு போன்றவை திருப்தி அளிக்கிறதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.