tamilnadu

img

கொரோனா காரணமாக முடங்கிய பள்ளி மாணவர்களின் இயல்பு நிலை... மனநல மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்....

தூத்துக்குடி:
கொரோனா காரணமாக மாணவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளை திறந்தால் அவர்கள்து இயல்பு வாழ்க்கை திரும்பும் என மன நல மருத்துவர் தெரிவிததார்.

தூத்துக்குடியில் இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் சார்பாக மாநில மனநல மருத்துவர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியின் முதல்வர் ரேவதி பாலன் சிறப்புரை ஆற்றினார்.மாநாட்டில் மனநல மருத்துவ மாநில தலைவர் டாக்டர் சபீதா பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது 

“கடந்த ஒரு வருடமாக கொரோ னா காரணமாக குழந்தைகள், இளம்பருவத்தினர் அதிகளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். சமூக வலைதளங்கள், செல்போனை அதிகளவில் பயன்படுத்துவது, வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் பெற்றோர் கண்காணிப்பில் இருத்தல் போன்றவற்றால் அவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், ஆன்லைன் என்ற பெயரில் செல்போன்களில் பாடம் நடத்தப்படுவதால் மாணவர்கள் பலருக்கு கண் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மேலும்சில குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதற்கு கூட பாதிப்பு ஏற்பட்டு, பல நோய்கள் உருவாக காரணமாகி உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டால் சகமாணவர்களை சந்திப்பது, விளையாடுவது, உடற்பயிற்சி என்று மாணவர்கள் இயல்பு வாழக்கை திரும்பவாய்ப்புள்ளது. இதனை கருத்திற் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் மாநாட்டின் தலைவர் பன்னீர்செல்வன், ஒருங்கிணைப் பாளர் எஸ்.சிவசைலம், மனநல மருத்துவர் சங்க மாநில செயலாளர் பாபுபாலசிங், பொருளாளர் அருண்குமார், டாக்டர் ஸ்ரீநிவாசன், தென் மண்டல தலைவர் ராமகிருஷ்ணன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.