அகர்தலா:
ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யின் கொடியை, திரிபுரா மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே ஏற்றி வைத்திருப்பது, கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ‘ஏபிவிபி’ என்பது, ஆர்எஸ்எஸ்-சின் மாணவர் பிரிவு ஆகும். கல்வி நிலையங்களில், மத ரீதியாக மாணவர்களைத் துண்டாடும் வேலையை இந்த அமைப்பு மூலம் ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது.
இந்நிலையில்தான், குறிப்பிட்ட மத அடிப்படைவாத அமைப்பான ஏபிவிபி-யின் கொடியை, திரிபுரா மத்தியப் பல்லைக்கழக துணைவேந்தராக இருக்கும் விஜய்குமார் லட்சுமிகாந்த் ராவ் தரூர்கர் என்பவர், பல்கலைக்கழக வளாகத்திலேயே ஏற்றி வைத்துள்ளார்.இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், ஏபிவிபி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதன்கொடியை ஏற்றிவைத்ததில் எந்த தவறும் இல்லை என்று தனது செயலை நியாயப்படுத்தும் முயற்சியிலும் துணைவேந்தர் விஜய்குமார் இறங்கியுள்ளார்.