கரூர், ஏப்.11-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி கரூர் பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி,பழாமாபுரம், புன்னம்சத்திரம், குப்பம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாவட்ட திமுக பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வேட்பாளர் ஜோதிமணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.