tamilnadu

img

துணை ராணுவத்தோடு மத்திய அரசு வந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்

புதுக்கோட்டை, ஜூன் 11- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு துணை ராணுவத்தோடு வந்தாலும் தடுத்து நிறுத்தியே தீருவோம் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன். விவசாயிகளையும், விவசாயத்தை யும் காவுவாங்கத் துடிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அமுல் படுத்தக்கூடாது என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் ஜூன் 5 முதல் 10-ஆம் தேதிவரை தமிழ கம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல் வேறு இடங்களில் நடைபெற்ற பிரச்சா ரம் திங்கள்கிழமை ஆலங்குடியில் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந் தது.  பொதுக்கூட்டத்தில் ஐ.வி.நாக ராஜன் பேசியது; மீத்தேன் திட்டத்தி னால் மக்களுக்குக்கும், சுற்றுச்சூழ லுக்கும் பாதிப்பு ஏற்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியமித்த ஆய் வுக்குழு அறிக்கை சமர்ப்பித்தது. இத னைத் தொடர்ந்து மீத்தேன் திட்டத்துக்கு ஜெயலலிதா நிரந்தர தடைவிதிப்பதாக அறிவித்தார். அம்மாவின் ஆசியோடு ஆட்சியை தொடர்வதாக சொல்லிக் கொள்ளும் எடப்பாடி அரசு மோடி அர சிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது. பிறகு தான் நெடுவாசல், கதிராமங்கலம்  திட் டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பெண்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரின் தீரமிக்க போராட்டத்தி னால் திட்டம் தொடராமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

தேர்தல்வரை அடக்கி வாசித்த மோடி அரசு மரக்காணம் தொடங்கி கட லூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளின் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார் பன் திட்டத்தை செயல்படுத்தும் நட வடிக்கையில் வேதாந்தா குழுமத்தின் மூலமாக இறங்கியுள்ளது. தனது ஆட்சியே போனாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்த மாட் டோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராய ணசாமி அறிவித்துள்ளார். அந்தத் தைரி யம் எடப்பாடி அரசுக்கு உண்டா? மண்ணையும், மக்களையும் அழிக்கப் போவும் இத்திட்டத்தை துப்பாக்கி முனையில்  செயல்படுத்திவிடலாம் என மத்திய அரசு கனவு காண்கிறது. துணை ராணுவமே வந்தாலும் சந்திப் போம். ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்றார். கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா ளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்ன துரை, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் க.செல்வராஜ், எம்.உடை யப்பன், ஏ.ராமையன், எஸ்.பொன்னுச் சாமி, வி.துரைச்சந்திரன், ஏ.ஸ்ரீதர்,  கே. சண்முகம், சி.சுப்பிரமணியன், சி.அன்பு மணவாளன் உள்ளிட்டோர் பேசினர். திருவரங்குளம் ஒன்றியக்குழு உறுப்பி னர் என்.தமிழரசன் நன்றி கூறினார்.