திருச்சிராப்பள்ளி, ஜன.1- வாக்கு எண்ணிக்கை தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரி வித்திருப்பதாவது: கடந்த டிச.27,30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை திருச்சி மாவட்டத்தில் 14 இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 5235-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைத் தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஓட்டு எண்ணும் இடங்களில் அனுமதிப் பெறாமல் நுழையும் நபர்கள், உடனடியாக காவல் துறையினரால் கைது செய்யப்படு வார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெ றும் அனைத்து மையங்களிலும் வெப் கேமரா பொருத்தி நேரடியாக மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து கண்காணிக் கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்க ளின் ஏஜெண்டுகள் உட்பட உள்ளே நுழையும் அனைவரும் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை செய்யப்படு வார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அவரது தேர்தல் முகவர் மற்றும் புகைப்படத்துடன் உரிய அனுமதி பெற்ற வாக்கு எண்ணிக்கை முகவர் ஆகியோர் மட்டுமே அனு மதிக்கப்படுவர். தடை செய்யப்பட்ட எந்த ஒரு பொரு ளையும் வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் எடுத்து வர அனுமதிக்கப்பட மாட்டாது. மது அருந்தி வருதல் கூடாது, செல்போன், தீப்பெட்டி, குடிநீர் பாட்டில், இங்க் பேனா ஆகியன கண் டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது. உள்ளாட்சித் தேர்தல்களில் சம்பந் தப்பட்ட தேர்தல்களுக்கான வாக்குகள் எண்ணத் தொடங்கும் முன்னர் ஒலிப் பெருக்கி மூலம் முன்கூட்டி அதற்கான அறிவிப்புகள் செய்யப்படும். அப்போது மட்டுமே அந்த தேர்தலுக்கான ஏஜெண்டு கள் மையத்திற்குள் செல்ல அனு மதிக்கப்படுவார்கள். மாவட்டத் தேர்தல் அலுவலரின் அனுமதி பெற்ற பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் நிழற்படம் எடுப்போர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் சந்தேகத்திற்குரிய வகையில் தென்படும் நபர்கள், வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் நபர்கள், தேர்தல் விதிமுறைகளுக்கு கீழ்படியாதோர் எவராக இருப்பினும் அத்தகைய நபர்கள் உடனடியாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு தேர்தல் நடத்தும் அலுவலரால் வெளியேற்றப்படு வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.