திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- கட்டுமான தொழிலாளர் சங் கத்தின் அபிஷேகபுரம் பகு திக்குழுவின் ஆண்டு பேரவை கூட்டம் ஞாயிறு அன்று எடமலைப் பட்டிபுதூர் எம்ஜிஆர் நகரில் நடை பெற்றது. சங்கத்தின் அபிஷேக புரம் பகுதிக்குழு தலைவர் எம்.எஸ்.சேது தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கவுரை யாற்றினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயலாளர் குமார் சிறப்பு ரையாற்றினார். சங்க மாவட்ட தலைவர் வி.கே.ராஜேந்திரன், செயலாளர் சந்திரசேகர், பொரு ளாளர் கல்யாணி ஆகியோர் பேசி னர். பகுதிக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், ஏசுதாஸ், கோபால், காளிதாஸ், மணிமுத்து, பழனி வேல், முருகேசன், ஆறுமுகம், ரவி, முத்துசாமி, செல்வமணி உள் பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்டுமான நல வாரியம் அரசிற்கு பரிந்துரை செய்து பணப்பயன்களை தொழி லாளர்களின் நலன் கருதி அர சாணை பிறப்பித்து உடனே அம லாக்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி ஏப்ரல் 1-ந் தேதி நலவாரிய அலுவலகம் முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிப் பெற செய்வது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் தலைவராக எம்.எஸ்.சேது, செயலாளராக ஏ.சக்தி வேல், பொருளாளராக எம்.காளி தாஸ், கமிட்டி உறுப்பினர்களாக எஸ்கல்யாணி, ஏ.ஏசுதாஸ், ஆர்.கோபால், டி.ரவி, சி.மணிமுத்து, டி.பழனிவேல், ஏ.ஆறுமுகம், எஸ்.முத்துசாமி, எஸ்.முரு கேசன், மலர் ஆகியோர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட் டது. பொருளாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.