tamilnadu

தஞ்சாவூர் ,கும்பகோணம்,தரங்கம்பாடி முக்கிய செய்திகள்

தஞ்சை சீர்மிகு நகரத் திட்டத்தில் ரூ.903 கோடியில் வளர்ச்சிப் பணி  

தஞ்சாவூர், ஜூன் 27- தஞ்சாவூர் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் படும் மொத்தத் திட்டங்களின் மதிப்பீடு ரூ.903.78 கோடி யாகும். ரூ.14.40 கோடி மதிப்பீட்டிலான திட்டம் முடிக்கப் பட்டு விட்டது. குடிநீர் மேம்பாட்டு திட்டம்,  விடுபட்ட இடங்க ளில் பாதாளச் சாக்கடை அமைத்தல், மார்க்கெட் மேம்படுத் தல் பணி(காமராஜ், சரபோஜி) உட்பட 21 திட்டங்கள் ரூ.479.99 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுகின்றன. பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய அரசு தன் பங்கான ரூ.116.00 கோடியை விடுவித்துள்ளது. மாநில அரசும் தன் பங்கை விடுவித்துள்ளது. தமிழ்நாடு சீர்மிகு நகரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தஞ்சா வூர் 6-ஆவது இடத்தில் உள்ளதாக தஞ்சை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். 

விழிப்புணர்வுக் கூட்டம்  

தஞ்சாவூர், ஜூன் 27- தஞ்சாவூர் ஆட்சியர் கூட்டரங்கில் குழந்தை பாலின விகித்ததைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடை பெற்றது. இதில் பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தை களின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்துவதல் போன் றவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.  60 அலுவலர் கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றனர். 

பிளாஸ்டிக் விற்பனை:  கடைகளில் ஆய்வு

கும்பகோணம், ஜூன் 27-  கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் தடை செய்த பிளாஸ்டிக் மற்றும் புகையிலை விற்பனை செய் வதை தடுக்க  கடை மற்றும் ஹோட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ஆய்வில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி நாயகம், ஊராட்சி செயலர் மற்றும் வட்டார மருத்துவர் அலுவலர் எம்.கலைச்செல்வன் வட்டார சுகாதார மேற்பார் வையாளர் ரவிச்சந்திரன் சுகாதார ஆய்வாளர் ஜோதி நாதன் ஊராட்சி உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடு மையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்ச ரித்தனர்.

மோசடி செய்ததாக  4 பேர் மீது வழக்கு 

தரங்கம்பாடி, ஜூன் 27- சங்கத்தின் பெயரில் போலி லெட்டர் தயாரித்து மோசடி செய்ததாக நாகை மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிரா பர்ஸ் சங்கத் தலைவரான சீர்காழியை சேர்ந்த சந்தானம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு அளித்ததன் பேரில் மயிலாடுதுறை யை சேர்ந்த குமார், நாகையை சேர்ந்த சரவணன், செல்வக்குமார், வேளாங்கண்ணி விஜயகுமார் ஆகிய 4 பேர் மீதும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வரு கின்றனர்.