திருச்சிராப்பள்ளி, அக்.5- திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்திற் குட்பட்ட நெய்வேலி ஊராட்சியில் அனைத்து கிராம அட்டைதாரர்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். கட்டி முடிக்கப் பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் நூலகத்தை உடனே திறக்க வேண்டும். சமுதாய கூடத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். ஊராட்சி முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் விளக்குகளை மாற்ற வேண்டும் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நெய்வேலி கிளைகள் சார்பில் வெள்ளியன்று ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் கிளை செயலா ளர் சத்தியராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க புறநகர் மாவட்ட செயலா ளர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் பிரியா, ஒன்றிய துணை செயலாளர் விஜயலெட்சுமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ராஜா, டிஒய் எப்ஐ ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், சுப்பிரமணி ஆகியோர் பேசினர். சீனிவாசன், அழகாம்பாள், பூபதி, அம்பிகா, மைதிலி, லெட்சுமி, பூரணி, அருக்காணி உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். பின்னர் பிடிஓவிடம் கோரிக்கை மனு வழங் கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பிடிஓ., கோரிக்கைகள் மீது உரிய விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.