tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துக!

தஞ்சாவூர், ஜூலை 28- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்ட 13-ஆவது மாநாடு சனிக் கிழமை தஞ்சாவூரில் மாவட்டத் தலை வர் சை.கோவிந்தராசு  தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செய லாளர் ச.செல்வி வரவேற்புரை ஆற்றி னார். துணைத் தலைவர் சிவ.இரவிச் சந்திரன் அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் இரா. பன்னீர்செல்வம் துவக்கவுரை ஆற்றி னார்.  மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்க சாமி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் சா.கோதண்டபாணி வரவு- செலவு அறிக்கையினையும், மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் எச்.உமா மகளிர் அறிக்கையினையும் தாக்கல் செய்தார்.  தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பின் மாவட்டச் செயலாளர் வழக்க றிஞர் இரா.தமிழ்மணி, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜகோபா லன், ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்டத் தலைவர் எஸ். செல்வராஜ், வருவாய்த்துறை அலு வலர் சங்க மாவட்டத் தலைவர் பா. பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாவட்ட துணைத் தலைவர் ச. தமிழ்வாணன், மாவட்ட இணைச் செய லாளர்கள் ப.கோதண்டபாணி, ஆ. செந்தில்குமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் தீர்மா னங்களை முன்மொழிந்தனர். நிறை வாக மாநிலச் செயலாளர் எம்.செளந்த ரராஜன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.என்.சாந்தா ராமன் நன்றி கூறினார். புதிய மாவட்ட தலைவராக சா.கோதண்டபாணி, செய லாளராக ஆ.ரெங்கசாமி, பொருளாள ராக கே.பாஸ்கரன், துணைத் தலை வர்களாக சிவ.இரவிச்சந்திரன், எம்.என்.சாந்தாராமன், ச.தமிழ்வாணன், ப.கோதண்டபாணி, இணைச் செய லாளர்களாக ச.செல்வி, ஆ.செந்தில் குமார், எஸ்.மகேஷ், எஸ்.அறிவழகன் மாவட்ட தணிக்கையாளர்களாக உ. ராகவன், எஸ்.பலராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டில், “காவிரி டெல்டா பகுதி களில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங் களை அனுமதிக்கக் கூடாது. பாது காக்கப்பட்ட வேளாண்மை மண்டல மாக டெல்டா பகுதிகளை அறிவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.  பணி ஓய்வு பெறும் நாளில் தற்கா லிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மாநில தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.