தஞ்சாவூர், ஏப்.1-
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தஞ்சாவூர் மின் வட்டக் கிளை சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் நிதியளிப்பு மற்றும் கேங்க்மேன் ஒப்பந்த ஊழியர் சிறப்பு பேரவை ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் ஏ.அதிதூதர் மைக்கேல்ராஜ் வரவேற்றார். சங்க மாநிலச் செயலாளர் டி.பழனிவேலு, சிஐடியு தஞ்சைமாவட்ட தலைவர் து.கோவிந்தராஜ், செயலாளர் சி.ஜெயபால்,மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் எஸ். ரெங்கராஜன், வட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ், பொருளாளர் எம்.ஆரோக்கியசாமி, மாவட்டச் செயலாளர் எம்.முனியாண்டி சிறப்புரையாற்றினர். ஒப்பந்த ஊழியர் ஆர்.வளவராசு நன்றி கூறினார். கூட்டத்தில், கேங்க்மேன் பதவிக்கு வெளியிலிருந்து ஆட்கள் எடுக்கும் முறையை மின்வாரியம் கைவிட்டு, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிபவர்களை பதவி மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன. மேலும்நாடாளுமன்றத் தேர்தல் நிதியாக மாநிலச் செயலாளர் டி.பழனிவேலுவிடம் முதல் கட்டமாக ரூ.31 ஆயிரம் வழங்கப்பட்டது.