திருச்சிராப்பள்ளி, செப்.8- திருச்சி மாவட்டம் பெரமங்களம் கிராமத்தில் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 14-வயது மனநலம் குன்றிய சிறுமிக்கு உரிய நீதி வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டக்குழுக்கள் சார்பில் சனிக் கிழமை புலிவலம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட தலைவர் குமார், மாதர் சங்க மாவட்ட தலை வர் லிங்கராணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க மாவட்ட செய லாளர் மல்லிகா, மாவட்ட துணை செய லாளர் கோமதி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயபால், புறநகர் மாவட்ட செயலா ளர் ரவி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட செயலாளர் சுப்ரமணி, விதொச மாவட்ட துணைத்தலைவர் நல்லுசாமி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்து ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். வீராசாமி, ரமேஷ், செல்வராஜ், ரெங்கநாதன், கோமதி, சசி, சுப்ரமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.