tamilnadu

img

மணல் திருட்டு தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக நடைபெறும், மணல் திருட்டை தடுப்பது  தொடர்பான, அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீ மகேஷ் (பேராவூரணி), செல்வேந்திரன் (சேதுபாவாசத்திரம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், “சட்ட விரோதமாக நடைபெறும் மணல் திருட்டை  தடுக்க, காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, இது தொடர்பாக வட்ட அளவில் மாதாந்திரக் கூட்டம் நடத்துவது, வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுவது” உள்ளிட்டவை முடிவெடுக்கப்பட்டது.