tamilnadu

மணல் மாட்டுவண்டி ரீச் திறக்கக்கோரிக்கை நாளை ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.4- மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்ட தலைவர் ராமர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது: திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளி டம் ஆற்றில் மணல் மாட்டு வண்டி தொழி லாளர்களுக்கு மணல் குவாரி திறக்கக் கோரி பலக்கட்ட போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி திருவெறும்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுல்லக்குடியில் கடந்த ஜூன் 10ம் தேதி மணல் குவாரி திறக்கப்பட்டு ஆகஸ்ட் 14ம் தேதி வரை செயல்பட்டது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குவாரி மூடப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கக்கோரி கடந்த 18ம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினரிடமும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் மனுமீது எவ் வித பதிலும் தரப்படவில்லை. இதையடுத்து பொதுப்பணித்துறை யால் கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் காணப்பட்ட கிளியநல்லூர். மாதவப்பெரு மாள் கோவில், தாளக்குடி, திருவளர்ச் சோலை, கூகூர் ஆகிய 5 இடங்களில் மணல் ரீச் திறக்கக்கோரி ஸ்ரீரங்கம், திரு வெறும்பூர், லால்குடி, நம்பர் 1 டோல்கேட் உள்ளிட்ட 5 இடங்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையும் எவ்வித நட வடிக்கை எடுக்காததால் ஆயிரகணக்கான தொழிலாளர்களை திரட்டி வரும் 6ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்தி ருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.