tamilnadu

img

நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்குக! விவசாயத் தொழிலாளர்கள் ஆவேசப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4- கொரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள கூலித் தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் பொறையார் பழைய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் பரமசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், வி.தொ.ச.வட்ட செயலாளர் காபிரியேல், பொருளாளர் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கவுரையாற்றினர்

அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சி.ரமேஷ் தலைமையில் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கோரிக்கை மனுவினை தாசில்தாரிடம் வழங்கினர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் தங்கராசு, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. மகாராஜன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம், ஒன்றிய செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி
புதுக்கோட்டை பொன்னமராவதியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வி.ஆர்.எம். சாத்தையா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.எல்.பிச்சை, வாலிபர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் கே.குமார், எஸ்.நல்லதம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  கட்டுமான தொழிலாளர் சங்க பி.சிங்காரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஏ.சௌந்தரராஜன், எம். மாயழகு, எம்.நாகராஜன், எஸ்.தங்கவேல், எம்.சுப்பையா, பி.வீரசேனன், எம்.மாணிக்க வல்லி, எஸ்.செல்வி, சண்முகவள்ளி, லெட்சுமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிறகு வட்டாட்சியர் ஆ.திருநாவுக்கரசை சந்தித்து கோரிக்கை மனுக்களை விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர்கள் அளித்தனர்.

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியரிடம் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் அ.செல்லமுத்து தலைமை யில் செயலாளர் வி.ராசு, சிபிஎம் தாலுகா செய லாளர் தென்றல் கருப்பையா, விவசாய சங்க ஒன்றிய தலைவர் மேகவர்ணம், செயலாளர் தர்மராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பனந்தாள் 
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றிய செயலா ளர்  தினேஷ் தலைமை தாங்கினார். நடேசன் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் அரவிந்தசாமி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாமிக்கண்ணு, விவசாய சங்க ஒன்றிய செயலா ளர் டி.ஜி.இராஜேந்திரன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் ஒன்றியம் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.நாகராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் பிஜே.சுதாஸ், ஒன்றிய தலைவர் நாகமுத்து, செயலாளர் தட்சிணா மூர்த்தி, ரவி சம்சுதீன் குணசேகரன் கலிய மூர்த்தி மாதர் சங்க பொறுப்பாளர் கலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாபநாசம் 
பாபநாசம் ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செய லாளர் உமாபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க பொறுப்பாளர்கள் விஸ்வநாதன் மாலதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் துவக்க உரையாற்றினார். பிகேஆர் இளங்கோவன், சேகர், மகேந்திரன், தர்மராஜ், அருள்ராஜன், காமராஜ், ரவி பவானி, கஸ்தூரி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.எம்.காதர் உஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  திருவிடைமருதுர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி தொச பொறுப்பாளர்கள் தருமையன் சிரஞ்சீவி தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அருளரசன், திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி, மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரி சாமி, விவசாய சங்க பொறுப்பாளர்கள் ரங்க சாமி, கண்ணன், கோவிந்தராஜ், முருகேசன் நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி 
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருச்சி மாநகர், புறநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தி ற்கு விதொச மாநிலச் செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தவிச மாநில துணைத்தலைவர் முகமதுஅலி தொடங்கி வைத்தார். புறநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசி னர். புறநகர் மாவட்ட நிர்வாகிகள் தெய்வநிதி, கனகராஜ், முருகேசன், பாலா, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், இளங்கோவன், செல்வமணி, தங்கராஜ் கலந்து கொண்டனர். துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்து குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.வி.எஸ்.இந்துராஜ், முத்துகுமார், ஆனந்தன், விதொச ஒன்றிய தலைவர் கணேசன், மங்கள்ராஜ் ஆகியோர் பேசினர்.

மணப்பாறை 
மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மணப்பாறை விதொச ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். சிபிஎம் மணப்பாறை ஒன்றியச் செயலாளர் ராஜகோபால், வையம் பட்டி விதொச ஒன்றிய செயலாளர் ராஜ், ஒன்றிய தலைவர் கருப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர் பத்மினி, இந்திய மாணவர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு கலந்து கொண்டனர். முசிறி சப்-கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முசிறி விதொச ஒன்றிய துணைத்தலைவர் டி.பி.நல்லுசாமி  தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலை வர் வீரவிஜயன், தா.பேட்டை ஒன்றிய செயலா ளர் சந்திரமோகன், கிருஷ்ணன், ரெங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றிய தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தவிச மாவட்ட தலைவர் ராமநாதன் தொடங்கி வைத்தார். பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விதொச ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். விதொச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, சிஐடியு மாவட்டத் தலை வர் டி.கோவிந்தராஜூ, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, வி.ச மாவட்டக்குழு எஸ்.ஞானமாணிக்கம், தரைக்கடை வியா பாரிகள் சங்கம் மாவட்டத் தலைவர் மணிமாறன்,  அந்தோணிசாமி, நாகலிங்கம் மற்றும் 50 பெண் கள் உள்பட 100 பேர் கலந்து கொண்டனர்.  அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விதொச ஒன்றியச் செயலாளர் ஏ.செல்வராஜ் தலைமை வகித்தார். விதொச ஒன்றியத் தலைவர் கே.கோபாலன் முன்னிலை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நம்பிராஜன், நக ரச் செயலாளர் ரவி, கிளைச் செயலாளர் குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை  
பட்டுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விதொச ஒன்றியச் செய லாளர் ஏ.உலகநாதன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் பி.கும ரேசன், ஒன்றியக்குழு ஆரோக்கியசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலை வர் ஏ.கோவிந்தசாமி, பெஞ்சமின், ஜீவானந்தம், தேவதாஸ், கே.சோமசுந்தரம், செல்வராஜ், மாரி முத்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நிறைவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு, விதொச மாவட்டத் தலைவர் ஆர். வாசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விதொச ஒன்றியச் செயலாளர் ஆர். சின்னப்பா, ஒன்றியத் தலைவர் எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விதொச மாநி லச் செயலாளர் எம்.சின்னதுரை கோரிக்கை விளக்க உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி, வி.ச ஒன்றியச் செயலா ளர் கே.ரவிச்சந்திரன் நிர்வாகிகள் ஆர்.சி.ரவி, பி.துரை, ஏ.கோவிந்தராசு, கே.சுந்தரராசு, நாகராசு, சி.சேகர் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளி 
திருக்காட்டுப்பள்ளி அருகே கூடநாணல் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விதொச ஒன்றியச் செயலாளர் எம்.சம்சுதீன் தலைமை வகித்தார். சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, சிவசாமி, பி.முருகே சன், எம்.பாஸ்கரன், டி.தாமரைச் செல்வன், பி.ஆயிராசு, கிளைச் செயலாளர் பழனி, லட்சுமணன், அறிவழகன் கலந்து கொண்டனர்.  திருவையாறில் விதொச ஒன்றியத் தலைவர் எம்.செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம், விதொச மாவட்டக்குழு உறுப்பினர் கே.மதியழகன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜா, விதொச ஒன்றியச் செயலாளர் பிரதீப் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.