திருச்சிராப்பள்ளி, மே 20- ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள் வேலையின்றி அவதிப்படுகின்றனர். மேலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவெறும்பூர் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சி.பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முகமதலி, சிபிஎம் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், பகுதிக்குழு உறுப்பினர்கள் சுலைமான், பாலு, தனபால், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல் ஆகியோர் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.