பொன்னமராவதி, ஜூன் 15- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த புதன்கிழமை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் இராஜகோபாலன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் மணிக்குமார், சங்க பொறுப்பாளர்கள் ராஜா புவனேஸ்வரன், தேவேந்திரன், புவியரசு, தேவகுமார் உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், உபரி ஆசிரியர்கள் என்று கூறி இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் ஆசிரியர்களாக நியமிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.