tamilnadu

img

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் படுகொலைக்கு நீதி வேண்டும் டெல்டா மாவட்டங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வே ண்டும். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெ யராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை முகாந்திரம் இன்றி கைது செய்து, கடுமையாக தாக்கி உயிரிழப்புக்கு காரணமான காவ ல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொ ழிற்சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் தமி ழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பா ட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருச்சி, தஞ்சா வூர், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சிஐடியு
சிஐடியு திருச்சி மாநகர் மாவ ட்டக்குழு சார்பில் மரக்கடை ராமகி ருஷ்ணா பாலம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மா வட்டத் தலைவர் ராமர் தலைமை வகி த்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐ டியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெ ங்கராஜன், ஆட்டோ சங்க மாநிலச் செயலாளர் மணிகண்டன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ரங்க ராசன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் பேசினர்.
விடுதலை சிறுத்தைகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் ஞாயிறன்று மரக்கடை  ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலா ளர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் அச்சு, ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் 
திருவையாறு பேருந்து நிலையம் அருகில் சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஏ.ராஜா தலைமை வகித்தார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் நிறைவுரையாற்றி னார். ஒரத்தநாடு ஒன்றியம் பாப்பா நாடு கடைவீதியில் ஒன்றியக் குழு உறு ப்பினர் வி.சிதம்பரம் தலைமை வகி த்தார். பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பூதலூர் 4 ரோட்டில் ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை  வகித்தார். தஞ்சாவூர் சாந்தி - கமலா திரை யரங்கம் அருகில் சிபிஎம் தஞ்சை மாநகரம், ஒன்றியம் சார்பில் ஒன்றியச்  செயலாளர் எம்.மாலதி தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர்  கோ.நீலமேகம், மாவட்டச் செய ற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகரச் செயலாளர் என்.குரு சாமி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். பட்டுக்கோட்டை தலைமை அஞ்ச லகம் அருகில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையிலும், திருவோணம் ஒன்றியம், ஊரணிபுரம் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் பி.கோவிந்தராஜ் தலைமையிலும், பூதலூர் வடக்கு ஒன்றியம், திரு க்காட்டுப்பள்ளி காந்திசிலை அருகில்  ஒன்றியச் செயலாளர் கே.காந்தி தலை மையிலும், அம்மாபேட்டையில் நக ரச் செயலாளர் வி.ரவி தலைமையி லும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கரூர்
கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் வேலாயுதம் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவ லகம் முன்பு ஒன்றியச் செயலாளர் கே. சண்முகம் தலைமை வகித்தார். மாவ ட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம் கண்டன உரையாற்றினர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் கீழ்வேளூர் ஒன்றி யச் செயலாளர் ஜி.ஜெயராமன் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகைமாலி கண்டன உரையாற்றி னார். சிக்கல் கடைத்தெருவில், நாகை  ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலை மை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். அவுரித்திடலில் நாகை நகரச் செயலாளர் (பொ)  சு.மணி தலைமை வகித்தார். தீண்டா மை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ் கண்டன உரையாற்றினார். கீழையூ ரில் ஒன்றியச் செயலாளர் எம்.முரு கையன், தலைஞாயிறில் ஒன்றியச்  செயலாளர் ஏ.வேணு, வேதார ணியத்தில் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, திருமருகலில் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.