திருச்சிராப்பள்ளி, ஜூன் 15- மார்க்சிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதிக்குழு செயலாளர் வேலுச்சாமி, லெனின், ரவி மற்றும் அன்பிலார் நகர் விஸ்தரிப்பு குடியிருப்புவாசிகள் சார்பில் குமரவேலு, பெரியசாமி, அரவிந்த், சதீஷ், ரவி ஆகியோர் ஆட்சியர் சிவராசுவிடம் திங்களன்று அளித்த மனுவில், எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள அன்பிலார்நகர், அன்பிலார்நகர் விஸ்தரிப்பு, மாருதிநகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் சரியான சாலைகள் இல்லை. இதனால் மழைக்காலங்களில் மண் சாலைகள் குண்டும், குழியுமாக, சேறும், சகதியுமாக மாறி மக்கள் செல்ல சிரமமாக இருக்கிறது. மேலும் குடிநீர் இணைப்பு வசதியும் இல்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் இப்பகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.