தஞ்சாவூர், ஜூன் 20- தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளி அருகே திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க இருப்பதை கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை கொள் ளிடம் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட் டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறி ஞர் வெ.ஜீவகுமார் கூறியதாவது: “கடந்த பல வருடங்களாக கொள்ளி டம் ஆற்றில் பல இடங்களில் அரசு மணல் குவாரி அமைத்து லட்சக்க ணக்கான லாரிகளில் மணல் அள்ளி விட்டனர். மேலும் பல இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் என்ற பெய ரால் ராட்சத குழாய்கள் அமைத்து அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் வைத்து தினசரி பல லட்சம் லிட்டர் தண் ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டனர். இதனால் கடும் கோடையிலும் வற் றாத கொள்ளிடம் ஆறு மூன்று ஆண்டு களாக பாலைவனமாக காட்சியளிக்கி றது. மழைக்காலங்களில் தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை அளிப்பது மணல் தான். இதனை எடுக்க அரசு அளித்துள்ள விதி முறைகளையும் மீறி மணல் எடுத்ததாலும், கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற பெயரால் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்ததாலும் இப்பகுதியில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் விட்டது.
இதனால் குடிநீருக்கே அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கேராளாவிலி லும், கர்நாடகாவிலும் ஆறுகளில் மணல் எடுப்பதை அந்த அரசுகள் முற்றிலும் தடைசெய்துள்ளன. ஆனால் தமிழ கத்தில் மணல் கொள்ளை கணக்கில்லா மல் நடக்கிறது. இந்நிலையில் திருச்சி னம்பூண்டியில் அரசு மணல் குவாரி அமைப்பது தற்கொலைக்கு சமம். மக்கள் குடிநீருக்கே வழியில்லாத நிலையில் அதனை சீர்படுத்த அரசு முயற்சி எடுக்காமல், மீண்டும் இங்கு மணல் குவாரி அமைத்து மணல் கொள் ளையடிப்பதை வன்மையாக கண்டிக்கி றோம். அரசு இங்கு மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும். அப்படி அரசு மணல் குவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டால் போராட் டம் தீவிரப் படுத்தப்படும்” என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து திமுக சார்பில் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், திமுக ஒன்றிய செயலாளர் கல் லணை செல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறி ஞர் வெ.ஜீவகுமார், பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.காந்தி, தமிழ் நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச்செய லாளர் முருகேசன், தமிழ் தேசிய பேரி யக்கம் ஒருங்கிணைப்பாளர் பெ.மணி யரசன், அமமுக சார்பில் மாவட்ட செய லாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய செய லாளர்கள் மதியழகன், புனல்செந்தில், வக்கீல்.நல்லதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கிருஷ்ண குமார், தென்னரசு, திருச்சினம்பூண்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெங்க ராஜ், வடிவழகன், ஆசிரியர்.நாகரா ஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.