தஞ்சாவூர், அக்.19- தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி நிர்வாகச் சீர்கேட்டினை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஆயிராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். தமிழ்செல்வி கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பி.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் ஏ.சந்திரா ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு நிர்வாகிகள் ஆற்காடு அலமேலு, ஏ.அன்னலெட்சுமி, ஆர்.பவானி, ஜெயந்தி, ஜீவிதா, ஜி.காந்திமதி, எம்.அகிலா, எம்.மாங்கனி, ஆர்.சாந்தி, ஆர்.சுதா, பி.சங்கிலியம்மாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.காந்தி, நிர்வாகிகள் த.முருகேசன், எம்.ரமேஷ், உதயகுமார், தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், “திருக்காட்டுபள்ளி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும். பேரூராட்சி அலுவலகம் மூலம், அரசால் வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு தெரியும்படி விளம்பரம் செய்ய வேண்டும். மக்கள் கட்டும் வரிப் பணத்திற்கு உட னுக்குடன் ரசீது வழங்க வேண்டும். கடைத்தெருவில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வது போல், கள்ளச்சா ராயம் விற்பதை பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.