திருச்சிராப்பள்ளி, ஆக.21- தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்குழு சார்பில் புத னன்று திருச்சி பிஎஸ்என்எல்இயு அலுவலகத்தில் நடைபெற்ற பத்தி ரிகையாளர் சந்திப்பில் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் கூறி யதாவது: இந்தியா முழுவதும் பிஎஸ் என்எல் நிறுவனத்தில் 1 லட்சம் ஒப்பந் தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. சம்பளம் வழங்காததால் கல்கத்தாவில் 7 ஒப்பந்த ஊழியர் கள் தற்கொலை செய்து கொண்ட னர். நாடு முழுவதும் இந்தநிலை தான் உள்ளது. தமிழகத்தில் 7 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். திருச்சி வருவாய் மண்டலத்தில் 500 ஒப்பந் தத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கேபிள் பழுது, லைன் பழுது உள்பட பல்வேறு முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிஎஸ்என்எல் வளர்ச்சியில் ஒப்பந்த ஊழியர்களின் பங்கும் உள்ளது. திருச்சி வருவாய் மண்டல ஒப் பந்த ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங் களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து நாடாளு மன்ற உறுப்பினர், லேபர் கமிஷ னர் ஆகியோரிடம் மனு கொடுத் துள்ளோம். சம்பளம் வழங்கக்கோரி மனுக்கள் கொடுத்தும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி யும் இதுநாள் வரை சம்பளம் வழங்கப் படவில்லை. இதில் மத்திய அரசு தலையிட்டு சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். கடந்த 5 மாத சம்பளத்தை உடனே வழங்கக்கோரி ஆகஸ்ட் 28-ம் தேதி ஒப்பந்த ஊழி யர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, பிஎஸ் என்எல்இயு மாவட்டச் செயலாளர் அஸ்லம்பாஷா, மாவட்டத் தலை வர் தேவராஜ், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் குமார், மாவட்டப் பொருளாளர் சண்முகம் ஆகி யோர் உடனிருந்தனர்.