அறந்தாங்கி, நவ.8- கஜா புயலில் பாதிக்கப்பட்டு வீடு இழந்த மக்களுக்கு எய்டு இந்தியா சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 வீடுகள் கட்ட ஆயத்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 12 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து புதுக்கோட்டை மேட்டுப்பட்டி இந்திரா நகர் லலிதா (60) பெருமாள் இவர்க ளின் இல்லம், அறந்தாங்கி இந்திரா நகர் மூன்றாம் வீதி ராணி (52) சேகர் இவர்கள் இல்லம் என இரண்டு இல்லம் திறப்பு விழா வெள்ளி அன்று நடைபெற்றது. இந்த இரண்டு வீட்டிற்கு நிதி உதவி கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட் (ஆதாரம் கனரா வங்கி) சென்னை அண்ணா சாலை கிளை யின் உதவி பொது மேலாளர் முருகன் வழங்கினார்.
இந்நிகழ்ச் சியில் மதுரை முதன்மை மேலா ளர் ஜெகநாதன், திருச்சி மேலா ளர் பிரேம்குமார், வின்சென்ட் ஆகியோர் புதிய இல்லத்தை திறந்து வைத்தார்கள். மதுரை முதன்மை மேலாளர் பேசுகை யில், கேன் ஃபின் ஹோம்ஸ் தன்னு டைய லாபத்தில் சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிடுகிறது. இத்தகைய தொகை இதுவரை சுமார் 6 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்து கேன் பின் லிமிடெட் இந்தியா முழுவதும் சுமார் 180 என்பது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியா முழு மையும் சமூக வளர்ச்சிக்காக பணிகளை பல்வேறு வகையில் தொண்டு நிறுவனங்கள் மூலமும் செயல்படுத்தி கொண்டு வரு கின்றது. உதாரணமாக, மீனவப் பகுதிகளில் உள்ள பெண்க ளுக்கு சுயசார்பு உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப் பட்டு அவர்கள் சுயமாக தொழில் தொடங்க பல்வேறு உதவிகள் செய்து அவர்களின் வளர்ச்சிக் காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசு பள்ளிக் கூடங்களை செப்பனிடுதல், பள்ளி மாணவர்க ளுக்கு தேவையான கல்வி சார்ந்த உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சமூக பணி களை முன்னெடுக்கிறது என்றும் கூறினார். முன்னதாக மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ராஜா வரவேற்றார். எய்டு இந்தியா சார்பாக சுப்பிர மணியன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார் கள். மேலும் புதுக்கோட்டை மாவட்ட மாதர் சங்க செயலாளர் சலோமி, மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி வாழ்த்துரை வழங்கினார்கள். நிறைவாக சுவாமிநாதன் நன்றி கூறினார்.