தஞ்சாவூர்:
பேராவூரணி அருகே குடிமராமத்து பணியின் போது, பாசன வாய்க்கால் கரையோ ரத்தில் வளர்ந்திருந்த மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லையில் இருந்துதொடங்கும் 5 ஆம் நம்பர் பாசன வாய்க்கால்கழனிவாசல், முடச்சிக்காடு, வீரியங்கோட்டை, உடையநாடு வழியாக ஊமத்தநாடுவரை செல்கிறது. தற்போது அரசின் சிறப்புகுடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வீரியங்கோட்டை முதல் உடையநாடு வரை, வாய்க்கால் கரையோரம்இருந்த வேம்பு, புங்கை உள்ளிட்ட மரங்கள்தூர்வாரும் போது, பொக்லைன் இயந்திரம்மூலம் சாய்த்து அகற்றப்பட்டது. தகவலறிந்தஇப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் மீதமிருந்த மரங்கள் காப்பாற்றப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், மக்கள் கூறியதாவது, “வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம். மழை பெறுவோம்” என மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கஜா புயலின் போது இப்பகுதியில் இருந்த பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்துவிழுந்தன. இந்நிலையில் பல சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் குளங்கள், ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால் கரையோரத்தில் மரங்களை நட்டு வளர்த்து பராமரித்து வந்தனர்.
தற்போது வளர்ந்த நிலையில் இருந்த அந்த மரங்களையும், நீண்ட காலமாக இருந்தநூற்றுக்கணக்கான மரங்களையும், பொதுப் பணித்துறையினர் தன்னிச்சையாக பொக்லைன் இயந்திரம் மூலம் சாய்த்துள்ளனர். மேலும் இரவோடிரவாக அந்த மரங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு உள்ளன. இந்த மரங்களை கொண்டு சென்று விற்பனை செய்தது யார் என்பது சந்தேகமாக உள்ளது. எனவேமாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவணம் பகுதியில், பாசன வாய்க்கால்கரையோரத்தில் இருந்த விலை உயர்ந்தநீர்மருத மரங்கள், வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவியோடு கடத்தி விற்பனை செய்யப்பட்டதும், இதில்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. (ந.நி.)