tamilnadu

img

புதிய கல்வி வரைவு எதிர்ப்புக் கூட்டம்

நாகப்பட்டினம், ஆக2- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், நாகப்பட்டினம் மையம் சார்பில், அண்மையில், நாகை அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில், தோழர் இரா.முத்துசுந்தரம் இரண்டாமாண்டு நினைவேந்தலும், தேசியப் புதிய கல்வி வரைவுக் கொள்கையின் அநீதங்களை விளக்கியும் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.அந்துவன்சேரல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் வரவேற்புரையாற்றினார். தோழர் ஆர்.எம்.எஸ்.புதைக்கப்படவில்லை எனும் பொருளில் நகராட்சிஆணையரக அனைத்து ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரகுராமன் உரையாற்றினார். தேசிய புதிய கல்வி வரைவுக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் எனும் பொருள் பற்றி தமிழ்நாடு- புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கச்செயலாளர், கல்வியாளர்ஜெ.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.மாவட்டத் துணைத் தலைவர்எஸ்.ஜோதிமணி நன்றி கூறினார்.