tamilnadu

img

மே தின பொதுக்கூட்டம்

தரங்கம்பாடி, மே 3-நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர்-சங்கரன்பந்தல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.இராசையன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலைச்செல்வி, ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, காபிரியேல், பஷீர் அகமது, கிளை செயலாளர்கள் எஸ்.இராஜேந்திரன், மகாலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.