tamilnadu

img

மார்ச் 15 திருச்சியில் ‘சிங்கப் பெண்ணே’ விழிப்புணர்வு பேரணி

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து ‘சிங்கப் பெண்ணே’ என்ற  விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற  உள்ளது. மார்ச் 15 அன்று திருச்சி உழவர்சந்தை  மைதானத்தில் புறப்படும் அந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் இருசக்கர வாக னத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழி ப்புணர்வு பேரணிக்கான விளம்பர வாக னத்தை அறம் மீடியா நெட் ஒர்க் நிர்வாக இயக்குனர் ரமேஷ்குமார் கொடியசைத்து தொ டங்கி வைத்தார்.  இந்த தொடக்க விழாவில் ஓய்வு பெற்ற டிஎ ஸ்பிக்கள் வெள்ளையன், குணசுந்தர், ரோட்டரி சங்க திருச்சி தலைவர் முருகா னந்தம், அறம் மக்கள் நல சங்க அறிவுமணி,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டை  சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.