திருவாரூர், ஜூலை 1- திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில் திங்கட்கிழமை நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், சத்துணவு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளராக பணிபுரிந்து பணிக் காலத் தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களான 10 பேருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி யாற்றுவதற்கான பணி நியமன ஆணையை ஆட்சியர் த. ஆனந்த் வழங்கினார். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் வட்டா ரங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களான பி.கமலி(மேட்டுப்பாளையம்), ஆர்.கலைவாணி(திருமக் கோட்டை) ஆகியோருக்கு 2017-18 ஆம் ஆண்டிற்கு சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கான மாநில விருது ரூ.10 ஆயி ரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சி யர் வழங்கினார்.