வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்
கொள்ளிடம், ஏப்.7-நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ரோட்டரி சங்கம் சார்பில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேலழகன் தலைமை வகித்தார். சீர்காழி தாசில்தார் சபீதாதேவி முதல் கையெழுத்திட்டு விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஆளுநர் பிறையோன், துணை ஆளுநர் விஜயகுமார், ரோட்டரி சங்கத் தலைவர் ஷாஜகான், தலைமையாசிரியர்கள் கமலநாதன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம் பகுதியில் தீவிர வாகனச் சோதனை
கொள்ளிடம், ஏப்.7-நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியில்நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வாகனச் சோதனைதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அனைத்துவாகனங்களையும் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ, மூட்டைகளோ எடுத்துச் சென்றால் அவைகளும் காவலர்கள் சோதனைக்குப் பிறகே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சீர்காழிதாசில்தார் சபீதா தேவி தலைமையிலான பறக்கும் படைஅதிகாரிகள் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி சோதனையிட்டனர்.