சீர்காழி ஜூலை 8- சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்துக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே புதுப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்த பழையாறு கிராமத்தில் சுமார் 500 வீடு களில் 1300 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பழையாறு சுனாமி நக ரில் 800 குடியிருப்புகளில் 1400 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் வசித்து வருகின்றனர். மேலும் பழையாறு துறைமுகத்தின் மூலம் விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளின் மூலம் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த 5 மாதங்களாக பழையாறு கிராமப் பகுதிக்குச் முறையாகச் குடிநீர் சென்று சேரவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கூட்டு குடிநீர் திட்டத் தின் மூலம் தண்ணீர் வருகிறது என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்ற வருடங்களை விட நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ள தால் மின்மோட்டார்கள் மூலம் தண் ணீரை உறிஞ்சி அனைத்து கிராமங்க ளுக்கும் எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் போதிய மின் மோட்டார் அழுத்தம் இல்லாததால் தூரத்தில் உள்ள கடலோர கிராமப்பகுதிக்கு தண்ணீர் சென்று சேர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குடி நீர்த் தட்டுப்பாட்டை நீக்கும் வகை யில் தனியார் லாரிகள் மூலம் வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5 வீதம் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் டேங்கர் லாரிகளில் குடிநீர் எடுத்து வந்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.