tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு மாவட்டங்களில் கொடியேற்று விழா கோலாகலம்

நாகப்பட்டினம், அக். 18- இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் நூற்றாண்டு துவக்க நாளான அக்டோபர் 17 அன்று நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றன.   நாகை நகரில், ‘வெண்மணி தியாகிகள் நினைவு இல்ல’மான, சி.பி.எம். மாவட்டக்குழு அலுவலக மாடியில்  மாநிலக்குழு உறுப்பின ரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பி னருமான வி.மாரிமுத்து செங்கொ டியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, நாகை நகரச் செயலாளர் சு.மணி (பொறுப்பு), சொ.கிருஷ்ணமூர்த்தி, பி.முனியாண்டி, ஆர்.பாலு பங்கேற்ற னர். நாகை மற்றும் நாகூர் நகரங்க ளில் பல்வேறு இடங்களில் கொடி யேற்றப்பட்டன. இதில் எம்.பி.குண சேகரன், டி.தினேஷ்பிரபு, சுப்பிர மணியன், எம்.கிருஷ்ணமூர்த்தி, வி.ரவி, வி.அண்ணாதுரை, எம். செண்பகம், வி.மணி, வி.பக்கிரிசாமி, சிங்காரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெளிப்பாளையம் கிளை சார்பில் சிறப்புக் கூட்டம் நடை பெற்றது. 

கீழ்வேளூர் ஒன்றியம்

கீழ்வேளூர் கட்சி அலுவலகத்தில்  மாவட்டச் செயலாளர் நாகைமாலி, கொடியேற்றி வைத்தார்.  ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் எம்.சாந்தி,  எஸ்.சுபாதேவி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் பங்கே ற்றனர். வெண்மணி எஸ்.மோகன் இங்கர்சால் இயக்கப் பாடல்கள் பாடினார். கீழையூர் ஒன்றியத்தில் கீழையூர், திருக்குவளை, பாலக்குறிச்சி, சின்னதும்பூர் உள்ளிட்ட இடங்களில் சி.பி.எம். கீழையூர் ஒன்றியச் செய லாளர் எம்.முருகையன் தலைமை யில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது. சோழவித்தியாபுரத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து அங்கு, ஒன்றியக்குழு வின் சிறப்புப் பேரவை நடை பெற்றது. வேதாரணியத்தில் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகா பதி தலைமையில் 10 இடங்களில் செங்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்து ராமலிங்கம், கோவ.சுப்பிரமணி யன், ஏ.வெற்றியழகன் கலந்து கொண்டனர்.

நாகை ஒன்றியம்

நாகை ஒன்றியத்தில் சிக்கல், கரு வேலங்கடை, ஆவராணி உள்ளிட்ட அனைத்துக் கிளைகளிலும் கொடி யேற்றி வைக்கப்பட்டுக் கிளைகளில் சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. செம்பியன்மகாதேவியில் மாநி லக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து கொடியேற்றி வைத்துச் சிறப்புப்  பேரவையில் கலந்து கொண்டார்.  சி.பி.எம். நாகை ஒன்றியச் செயலா ளர் பி.டி.பகு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.கே .ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைஞாயிறு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு தலைமையில் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

கரூர்

கட்சியின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் கட்சியின் செங்கொ டியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கப்பட்டது. விழாவிற்கு கட்சி யின் மாவட்ட செயலாளர் கே.கந்த சாமி தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பேசினார். கரூர் நகர செயலாளர் எம். ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பி னர்கள் தண்டபாணி, ஹோசிமின், ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.

திருக்கடையூர்

நாகை மாவட்டம் திருக்கடை யூரில் கம்யூனிஸ்ட் இயக்க நூற்றா ண்டு துவக்க விழா- கல்வெட்டு திறப்பு- கொடியேற்று விழா ஆகிய நிகழ்ச்சிகள் சிபிஎம் அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் தலைமையில் நடைபெற்றது. கட்சி யின் கொடியினை மாவட்ட செயலா ளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நாகை மாலி ஏற்றி வைத்தும், நூற்றாண்டு விழா கல்வெட்டினை வட்ட செயலாளர் பி.சீனிவாசன் திறந்து வைத்தும் உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இராசையன், ரவிச் சந்திரன், வட்டக்குழு உறுப்பினர் காபிரியேல் ஆகியோர் உரை யாற்றினர். 

அரிமளம்

புதுக்கோட்டை மாவட்டம் அரி மளத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற இக்கொடியேற்று விழாவிற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ஆவுடைமுத்து தலைமை வகித் தார். செங்கொடியை ஏற்றி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சங்கர் உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.​​​​​​​